கார் திருடிய 4 பேர் கைது

குன்றத்தூர்: குன்றத்தூர் அருகே வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில், தனிப்படை அமைத்து, போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் குன்றத்தூர் அருகே வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் ஒரு கார் வேகமாக சென்றது. இதை பார்த்த போலீசார், காரை மறித்து நிறுத்தினர். இதை கண்டதும், ஒருவர், கீழே இறங்கி ஓடிவிட்டார். இதனால், சந்தேகமடைந்த போலீசார், 4 பேரைசுற்றி வளைத்து, காருடன் குன்றத்தூர் காவல் நிலையம் கொண்டு சென்று தீவிரமாக விசாரித்தனர்.

அதில், குன்றத்தூரை சேர்ந்த தாமோதரன் (23), தினேஷ் (19), அசோக் (23), அருண்பாண்டியன் (21), தப்பியோடிய வாலிபர் சூர்யா (22) என தெரிந்தது. மேற்கண்ட 5 பேரும், கோவூரில் சாலையோரத்தில் நிறுத்தப்பட்டு இருந்த லோகேஷ் என்பவருக்கு சொந்தமான ஓட்டுனர் பயிற்சி பள்ளி காரை திருடி சென்றபோது, சிக்கினர் என தெரியவந்தது.

இதையடுத்து போலீசார், வழக்குப்பதிவு செய்து, அவர்களை கைது செய்தனர். மேலும், அவர்கள் வேறு ஏதேனும் குற்றச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார்களா என தீவிரமாக விசாரிக்கின்றனர். தப்பியோடிய சூர்யாவை வலைவீசி தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட தாமோதரன், கொலை குற்றவாளி. மற்ற 4 பேர் திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட குற்றச் செயல்களில் தொடர்புடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>