×

கறிக்கோழி வளர்க்க கிலோவுக்கு 12 வழங்க வேண்டும்: ஒப்பந்த வளர்ப்பு விவசாயிகள் கோரிக்கை

காஞ்சிபுரம்: தனியார் நிறுவனங்கள் கறிக்கோழி வளர்ப்புக்கு கிலோ 12 வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒப்பந்த கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகள் காஞ்சிபுரம் கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமாரிடம் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது. தமிழகத்தில் சுமார் 50 ஆயிரம் கறிக்கோழி பண்ணைகள் உள்ளன. இந்த பண்ணைகள் மூலம் தனியார் நிறுவனங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் கறிக்கோழிகள் வளர்க்கப்படுகின்றன. கடந்த 20 ஆண்டுகளாக தனியார் நிறுவனங்கள் கறிக்கோழி வளர்க்க 3.50 மட்டுமே வழங்குகிறது. இந்த விலை எங்களுக்கு போதுமானதாக இல்லை.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பல்லடத்தில் ஒப்பந்த கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகள், தனியார் நிறவனங்களிடம் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் ஜன 4ம் தேதிமுதல் தமிழ்நாடு முழுவதும் கறிக்கோழி வளர்ப்புக்கான குஞ்சுகளை இறக்குவதில்லை என அனைத்து சங்கங்களும் ஒருமனதாக முடிவெடுத்துள்ளன. அதன்படிப்படையில் காஞ்சிபுரம் மாவட்ட ஒப்பந்த கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகள் சங்கமும் வளர்ப்புக்கான கறிக்கோழி குஞ்சுகளை இறக்கவில்லை. இந்த போராட்டம் தொடர்ந்தால் தமிழகம் முழுவதும் கறிக்கோழி தட்டுப்பாடு ஏற்படும். எனவே, அரசு சார்பில் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Tags :
× RELATED குடிநீர், கழிப்பறை, மின் விளக்குகள்...