வாலிபர் குடும்பத்துக்கு 18 லட்சம் இழப்பீடு: நீதிமன்றம் உத்தரவு

சென்னை: செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கத்தை சேர்ந்தவர் ஜே.விக்னேஷ் (21). கடந்த 2019, பிப்ரவரி மாதம் பைக்கில் பின்புறம் அமர்ந்து பெருங்களத்தூருக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது பைக் புளிய மரத்தில் மோதி விக்னேஷ், இறந்தார். இந்நிலையில், தனது மகனின் இறப்பிற்கு 40 லட்சம் இழப்பீடு வழங்க கோரி, விக்னேஷின் தாய் கமலா, சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு விசாரணை நீதிபதி பி.சரோஜினி தேவி முன்பு நடந்தது.  இதில், மனுதாரர் இறப்புக்கு பைக்கை அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும் இயக்கியதே காரணம். எனவே, மனுதாரருக்கு இழப்பீடாக 18.69 லட்சத்தை, ஆண்டுக்கு 7.5 சதவீத வட்டியுடன் மேக்மா எச்டிஐ ஜெனரல் இன்சுரன்ஸ் நிறுவனம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.

Related Stories:

>