×

அத்தியாவசிய பணியாளர் பட்டியலில் வழக்கறிஞர்களையும் சேர்க்க வேண்டும்: மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை

சென்னை: உச்ச நீதிமன்ற மற்றும் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகள், மத்திய அரசு, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அரசுகள், பார் கவுன்சில் ஆகியோருக்கு தமிழ்நாடு வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவரும், மூத்த வழக்கறிஞருமான எஸ்.பிரபாகரன் கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது: அரசு அறிவித்துள்ளபடி முதற்கட்ட கொரோனா தடுப்பூசி போடப்படும் அத்தியாவசிய பணிகளில் வழக்கறிஞர்களையும் சேர்க்க வேண்டும். ஏற்கனவே கொரோனா ஊரடங்கால் நீதிமன்றங்களில் நேரடி விசாரணை நடத்தப்படாமல் ஏராளமான வழக்குகள் தேங்கியுள்ளன.

இந்த நிலையில் கொரோனா தடுப்பூசி போடப்படும் அத்தியாவசிய பணியாளர்கள் பட்டியலில் வக்கீல்களையும் சேர்த்தால் நீதிமன்றங்கள் விரைவில் முழு அளவில் செயல்பட தொடங்கும். கொரோனா தடுப்பூசி போடுவதற்கான வசதிகள் பார்கவுன்சில் மற்றும் உயர் நீதிமன்றத்தில் உள்ளது. எனவே, முதற்கட்ட தடுப்பூசிக்கான அத்தியாவசிய பணியாளர் பட்டியலில் வக்கீல்களையும் சேர்க்க வேண்டும். இல்லையெனில், உயர்நீதிமன்றத்தை நாடி தீர்வு காண நேரிடும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Tags : lawyers ,state governments ,
× RELATED நீதிமன்றத்தை புறக்கணித்து வழக்கறிஞர்கள் போராட்டம்