×

வந்தீங்களா... குடிச்சீங்களா... போயிட்டே இருக்கணும்.... பார்களில் உட்கார்ந்து குடிமகன்கள் பேச கூடாது: டாஸ்மாக் மாவட்ட மேலாளர்கள் உத்தரவு

சென்னை: மது அருந்துபவர்கள் பார்களில் குடித்துவிட்டு உடனே செல்ல வேண்டும். தேவையில்லாமல் பேசுவதை தவிர்க்க வேண்டும் என்று பார் உரிமையாளர்களுக்கு மாவட்ட மேலாளர்கள் சுற்றறிக்கை அனுப்பியுள்ளனர். தமிழகத்தில் உள்ள 3000 டாஸ்மாக் டாஸ்மாக் பார்களில் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து அந்தந்த மாவட்ட மேலாளர்கள் பார் உரிமையாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளனர். அதில் கூறியிருப்பதாவது:மாஸ்க் அணிந்து வருபவர்களை மட்டுமே பார்களுக்குள் அனுமதிக்க வேண்டும். பார்களுக்குள் வாடிக்கையாளர்கள் கண்டிப்பாக எச்சில் துப்பக்கூடாது. மதுக்கூடத்திற்கு வரும் அனைவரும் ‘ஆரோக்கிய சேது’ செயலியை செல்போனில் பதிவு செய்திருக்க வேண்டும்.

வெப்ப அளவீட்டு சோதனை செய்த பிறகே மதுக்கூடங்களுக்குள் அனுமதிக்க வேண்டும். வாடிக்கையாளர்களின் விவர பதிவேடுகளை பராமரிக்க வேண்டும். கொரோனா அறிகுறி தென்பட்டால் சம்பந்தப்பட்ட நபர்கள் குறித்து அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு தெரியப்படுத்த வேண்டும். கொரோனா குறித்த விழிப்புணர்வு போஸ்டர்களை வாடிக்கையாளர்களுக்கு தெரியும் வகையில் அமைக்க வேண்டும். மேஜைகளில் கண்டிப்பாக கிருமிநாசினி வைத்திருக்க வேண்டும். மதுக்கூடங்களுக்குள் வாடிக்கையாளர்கள் கூட்டம் கூடுவதையும், பேசுவதையும் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். உணவு தரச்சான்றுகளை பார்வையில் தெரியும் வண்ணம் வைக்க வேண்டும்.

Tags : Citizens ,Tasmag ,
× RELATED மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் 26,875 பேர் தபால் வாக்களிக்க ஏற்பாடு