தண்ணீர்பந்தல் பகுதியில் சிக்னல் அமைக்க கோரிக்கை

திருப்பூர்,ஜன.5: திருப்பூர், அவிநாசி ரோடு தண்ணீர் பந்தல் நால்ரோடு பகுதியில்  போக்குவரத்து போலீசார் பணியில் இல்லாததால் அங்கு அடிக்கடி விபத்துகள்  நடைபெறுகிறது. எனவே இங்கு சிக்னல் அமைத்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்த  வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. திருப்பூர் அவிநாசி ரோட்டில்  தண்ணீர் பந்தல் காலனி பகுதி உள்ளது. இந்த பகுதியில் பின்னலாடை நிறுவனங்கள்,  உள்ளிட்ட மற்ற தொழில் நிறுவனங்கள் அதிகமாக உள்ளது. மேலும் தண்ணீர் பந்தல்  பகுதியில் 3 டாஸ்மாக் கடைகள் உள்ளது. காலை, மாலை நேரங்களில் அந்த பகுதியில்  இரு சக்கர வாகனங்களில் வருபவர்கள் அதிகப்படியாக ஒரு வழிப்பாதையை  பயன்படுத்துகிறார்கள். இதனால் அப்பகுதியின் வழியாக வரும் நான்கு சக்கர வாகனங்கள் மோதும் அபாயம் உள்ளது. மேலும், அங்குள்ள டாஸ்மாக் மதுக்கடைளில் குடித்து  விட்டு வருபவர்களாலும் அதிகம் விபத்து ஏற்படுகிறது. நேற்று அப்பகுதியில்  முதியவர் ஒரு அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலியானார். இதே போல்  அப்பகுதியில் தொடர் விபத்துகள் நடைபெற்று வருகிறது. எனவே தண்ணீர்பந்தல்  நால்ரோடு பகுதியில் சிக்னல் அமைத்து போக்குவரத்ைத ஒழுங்குபடுத்த போலீசார்  நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>