×

தனி தொகுதிகளில் அருந்ததியருக்கு சமூக நீதி வலியுறுத்தி மாநாடு

உடுமலை,ஜன.5: ஆதித் தமிழர் பேரவையின் மகளிர் அணி சார்பில், தனித் தொகுதிகளில் அருந்ததியருக்கு சமூக நீதி என்ற தலைப்பில் உடுமலையில் நேற்று முன்தினம் மாநாடு நடைபெற்றது. திருப்பூர் தெற்கு மாவட்ட மகளிர் அணி செயலாளர் கவுசல்யா தலைமை வகித்தார். உடுமலை நகர மகளிரணி செயலாளர் தேவி வரவேற்றார். மாவட்ட மகளிரணி தலைவர் சகுந்தலா, மாவட்ட பொறுப்பாளர் சரோஜினி மாசிலாமணி, அருக்காணி, சாவித்திரி, ஈஸ்வரி, சுகந்தி, சிந்தாமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநாட்டில் மாவட்ட திமுக பொறுப்பாளரும், மடத்துக்குளம் தொகுதி எம்எல்ஏ.வுமான ஜெயராமகிருஷ்ணன் வாழ்த்தி பேசினார். ஆதித்தமிழர் பேரவை நிறுவன தலைவர் அதியமான் சிறப்புரையாற்றினார்.

மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை முதல்வராக்க தீவிர பிரசாரம் மேற்கொள்வது, தனி தொகுதிகளில் அருந்ததியர் மக்களுக்கு அரசியல் கட்சிகள் வாய்ப்பு வழங்க வேண்டும். 3 சதவீத உள் ஒதுக்கீட்டை 6 சதவீதமாக உயர்த்த வேண்டும். அனைத்து துறைகளிலும் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் உடுமலை நகர மகளிரணி தலைவர் தம்புராணி நன்றி கூறினார்.

Tags : Conference ,constituencies ,Arundhati ,
× RELATED காஷ்மீர் மற்றும் லடாக்கில் தொகுதி...