×

தமிழகம் மாளிகையில் நாற்று நடவு பணிதுவக்கம்

ஊட்டி, ஜன. 5: ஆண்டு தோறும் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில நடக்கும் மலர் கண்காட்சியை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இவர்களில், பெரும்பாலான சுற்றுலா பயணிகள் ஊட்டி அருகே பிங்கர்போஸ்ட் பகுதியில் உள்ள தமிழகம் மாளிகை பூங்காவிற்கு செல்வது வழக்கம். இந்த பூங்காவும் தோட்டக்கலைத்துறை மற்றும் தாவரவியல் பூங்கா நிர்வாக கட்டுப்பாட்டில் உள்ளது. இதனால், ஆண்டு தோறும் மலர் கண்காட்சிக்காக இங்கும் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு பூங்காக்கள் தயார் செய்யப்படுவது வழக்கம். தாவரவியல் பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகள் ரோஜா பூங்கா, படகு இல்லம் மற்றும் மரவியல் பூங்கா மட்டும் செல்வது மட்டுமின்றி பாரம்பரிய கட்டிடமான தமிழகம் மாளிகையை பார்வையிட செல்கின்றனர். அதே போல் கோடை சீசனின் போது தமிழக முதல்வர் உட்பட பல்வேறு அமைச்சர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் இங்கு தங்கி ஓய்வு எடுக்கின்றனர். இதனால், இந்த பூங்காவும் ஆண்டு தோறும் கோடை சீசன் மற்றும் மலர் கண்காட்சி போட்டிக்காக தயார் செய்யப்படுகின்றன. தாவரவியல் பூங்காவில் கோடை சீசனுக்காக மலர் நாற்றுக்கள் நடவு பணிகள் துவங்கிய நிலையில், தமிழகம் மாளிகை பூங்காவிலும் நாற்று நடவு பணிகள் துவக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக சால்வியா, டெல்பீனிம், பேன்சி மலர் செடிகள் மற்றும் மேரிகோல்டு மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு வருகிறது. தொடர்ந்து மலர் செடிகள் வளரும் காலத்தை பொருத்து மற்ற மலர் செடிகள் நடவு செய்யப்படவுள்ளன.

Tags : Seedling planting commencement ,Tamil Nadu ,House ,
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...