கட்டிடக்கழிவுகளை கொட்டிய லாரியை முற்றுகையிட்ட பொதுமக்கள்

பொள்ளாச்சி, ஜன. 5: பொள்ளாச்சி தாராபுரம் ரோடு அனுப்பர்பாளையம் அருகே பள்ளமான பகுதியில் நேற்று காலை, லாரி மூலம் சிலர் கட்டிடக்கழிவு உள்ளிட்டவைகளை கொட்டவதாக அப்பகுதி மக்களுக்கு தெரியவந்தது. இது குறித்து நெகமம் போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். மேலும், லாரியை முற்றுகையிட்டு மறியலில் ஈடுபட பொதுமக்கள் முயற்சித்ததாக கூறப்படுகிறது. சம்பவ இடத்துக்கு விரைந்த சென்ற போலீசார், கட்டிடக்கழிவு ெகாட்டியது தொடர்பாக லாரி டிரைவரிடம் விசாரித்தனர். அப்போது, வெளிப்பகுதியில் இருந்து கழிவுகளை கொண்டுவந்து கொட்டியது தெரியவந்தது.இதையடுத்து, சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதியளித்தனர். அதன்பிறகே, அங்கிருந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதையடுத்து, கழிவுகளை கொட்டியதாக, டிரைவர்கள் வேலுசாமி உள்ளிட்ட 3பேர் மீது நெகமம் போலீசார் வழக்குப்பதிவு செய்ததாக கூறப்படுகிறது.

Related Stories:

>