கோவை வரும் ராகுல்காந்திக்கு உற்சாக வரவேற்பு அளிக்க முடிவு

கோவை, ஜன. 5: அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி துணை தலைவர் ராகுல்காந்தி வருகிற 20ம்தேதி (புதன்) காலை 11 மணிக்கு டெல்லியில் இருந்து விமானம் மூலம் கோவை வருகிறார். அன்றையதினம், கோவையில் உள்ள தொழில்முனைவோருடன் கலந்துரையாடுகிறார். பின்னர், திருப்பூர் செல்கிறார். அங்கு, தொழில்முனைவோர் மற்றும் தொழிலாளர்களுடன் கலந்துகொள்கிறார். கோவை, திருப்பூரில் கலந்துரையாடல் கூட்டம் எங்கு நடத்துவது? என்பது ெதாடர்பாக போலீசாருடன் இணைந்து காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், கோவை மாநகர் மாவட்ட காங்கிரஸ் ராமநாதபுரம் சர்க்கிள் சார்பில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் ராமநாதபுரத்தில் நடந்தது. சர்க்கிள் தலைவர் சீனிவாசன் தலைமை தாங்கினார். மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் வக்கீல் கருப்புசாமி முன்னிலை வகித்தார். காங்கிரஸ் மாநில செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார் சிறப்புரையாற்றினார். இதில், ‘’கோவை வரும் ராகுல்காந்திக்கு உற்சாக வரவேற்பு அளிப்பது, அவர் பங்கேற்கும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் காங்கிரஸ் தொண்டர்கள் பெருமளவில் பங்கேற்பது’’ என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், பொதுச்செயலாளர் பாசமலர் சண்முகம், மருதூர் செல்வராஜ், ராமச்சந்திரன், சக்திவேல், இளைஞர் காங்கிரஸ் தலைவர் குமரேசன், வார்டு தலைவர்கள் அசோக், சேது, வரதராஜ், சுரேஷ், மரகதம், வெங்கடேஷ், ராஜமாணிக்கம் உள்பட பலர் கலந்துெகாண்டனர்.

Related Stories:

>