×

குழந்தைகளின் எதிர்காலம் சிறப்பாக அமைய சத்சங்கங்களுக்கு அழைத்து வாருங்கள் பாடகர் சுசித்ரா பால சுப்ரமாணியன் பேச்சு

கோவை, ஜன.5 : கோவை  கிருஷ்ணா ஸ்வீட்ஸ் வழங்கும் எப்போ வருவாரா 2021’ நிகழ்ச்சியின் 4-ம் நாள் விழா ஆர்.எஸ்.புரம் கிக்கானி மேல்நிலை பள்ளியின் சரோஜினி நடராஜ் களையரங்கத்தில் நேற்று நடைபெற்றது. இவ்விழாவில் பாடகர் சுசித்ரா பால சுப்ரமாணியன் கலந்து கொண்டு  கிருஷ்ணரை பற்றியும் மற்றும் அவர் பக்தையான மீராபாய் பற்றியும் பேசினார். இவ்விழாவில் பாடகி சுசித்ரா பால சுப்ரமாணியன் பேசியதாவது, ‘ மீராபாய் பாய்  ரஜபுத் வம்சத்தில் பிறந்தவர். சிறு வயதில் இருந்தே கடவுள் கிருஷ்ணர் மீது தீராத அன்பும் பற்றும் கொண்டவராக இருந்தார்.  இது மட்டும் இன்றி சமையல், வாள் சண்டையில் சிறந்து விளங்கினார். மன உறுதியோடும்,  யாருக்கும் பயப்படாமல் வாழ்நாள் முழுவதும் வாழ்ந்து காட்டியுள்ளார்.  தற்பொழுது நமது பெண் பிள்ளைகளை எப்படி துணிவோடு வளர்க்கவேண்டுமோ, அதற்கு எடுத்துக்காட்டாக இருந்துள்ளார்.

தற்போதைய காலக்கட்டத்தில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு  மொபைல் போன்களை கொடுக்கின்றனர்.  ஒரு சில குழந்தைகள் பெற்றோர்களிடம் அடம்பிடிப்பதால் பெற்றோர்களும் வேறுவழியின்றி கொடுத்து விடுகிறார்கள். இது மிகவும் தவறான செயல் ஆகும். விரும்பியது கிடைக்காவிட்டால் அதை அடம்பிடித்து பெற்றுக் கொள்ளலாம் என்பதை குழந்தைகள் தெரிந்து கொண்டால், அதை வாழ்க்கை முழுக்க அவர்கள் பின்பற்றுவார்கள். அது அவர்களின் எதிர்காலத்தை மிகவும் பாதிக்கும். நாம் இது போன்று சத்சங்களுக்கு வரும் பொழுது நம் குழந்தைகளையும் அழைத்து வரவேண்டும். இங்கு உபதேசிக்கும் இறையன்பு, தியானம் போன்ற விஷயங்களை அவர்கள் தெரிந்து கொண்டால் அவர்களின் எதிர்காலம் சிறப்பாக அமையும்’ இவ்வாறு அவர் பேசினார்.

Tags : Suchitra Bala Subramanian ,children ,
× RELATED புது வாழ்விற்கு வழியமைத்ததிரு(புது)நாள்