×

திருச்சி அரியமங்கலம் திடீர் நகர் கலைஞர் மளிகை கடை

திருச்சி, ஜன. 5: திருச்சி அரியமங்கலம் திடீர் நகர் கலைஞர் தெருவை சேர்ந்தவர் ரசூல் முகமது (45). இவர் அப்பகுதியில் சிறிய அளவில் மளிகை கடை நடத்தி வருகிறார். திடீர் நகரை சேர்ந்தவர் குமரேசன் (25). கூலித்தொழிலாளி. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை நண்பருடன் ரசூல்முகமது மளிகை கடைக்கு சென்ற குமரேசன், கடனுக்கு சிகரெட் கேட்டுள்ளார். அப்போது கடன் எல்லாம் கொடுக்க முடியாது என ரசூல் முகமது கூறியதால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதில் குமரேசன் தகராறில் ஈடுபட்டது குறித்து அவரது முதலாளியான லோகநாதனிடம் கூறி கண்டிக்குமாறு ரசூல்முகமது கூறினார். இதனால் ஆத்திரமடைந்த குமரேசன், இரவு ரசூல்முகமது வீட்டுக்கு சென்று மிரட்டியதாக தெரிகிறது. அதை தொடர்ந்து நள்ளிரவு 12 மணியளவில் ரசூல்முகமது மளிகை கடை தீப்பற்றி எரிய துவங்கியது.

இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனே தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று போராடி தீயை அணைத்தனர். இதுகுறித்து அரியமங்கலம் போலீசார் நடத்திய விசாரணையில், கடனுக்கு சிகரெட் கேட்ட தகராறில் ஆத்திரமடைந்த குமரேசன், பெட்ரோல் ஊற்றி கடைக்கு தீ வைத்தது தெரியவந்தது. மேலும் பெட்ரோல் குண்டு வீசியதாக வந்த தகவலை அடுத்து தொடர்ந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. சோதனையில் பெட்ரோல் குண்டுகள் வீசியதற்கான தடயம் இல்லை என தெரியவந்தது. இதையடுத்து கடைக்கு தீ வைத்தது, கொலை மிரட்டல் விடுத்தது என 2 பிரிவின் கீழ் வழக்குபதிந்த அரியமங்கலம் போலீசார் தலைமறைவான குமரேசன் அவரது நண்பர் உள்பட 2 பேரை தேடி வருகின்றனர்.

Tags : Trichy Ariyamangalam ,City Artist Grocery Store ,
× RELATED லாரியில் சிக்கி திருநங்கைகள் 2 பேர் பலி