கன்னியாகுமரி, மதுரைக்கு அனுப்பி வைப்பு அவளிவநல்லூர் ஊராட்சியில் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு

மன்னார்குடி, ஜன. 5: திருவாரூர் மாவட்டம், நன்னிலம் தொகுதிக்குட்பட்ட வலங்கைமான் ஒன்றியம், அவளிவநல்லூர் ஊராட்சியில் நேற்று அதிமுகவை நிராகரிக்கிறோம் என்ற தலைப்பில் மக்கள் கிராமசபை கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பங்கேற்க தஞ்சையில் இருந்து வந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வரும் வழியெங்கும் சாலைகளின் இருபுறங்களிலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு நின்று உற்சாக வரவேற்பு அளித்தனர். அம்மாபேட்டை பகுதிக்கு மு.க.ஸ்டாலின் வந்தபோது அவரது வாகனத்தை கண்ட ஆயிரக்கணக்கான பெண்கள் அதிமுகவை நிராகரிப்போம், திமுகவை அரியணையில் ஏற்றுவோம் என உற்சாகத்தோடு கோஷங்களை எழுப்பினர். அவர்களை நோக்கி உற்சாகத்தோடு மு.க.ஸ்டாலின் கையசைத்தார்.

வலங்கைமான் ஒன்றியம், அவளிவநல்லூர் ஊராட்சியில் மக்கள் கிராம சபை கூட்டம் நடந்த மேடைக்கு வந்த திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு திருவாரூர் மாவட்ட திமுக செயலாளரும், எம்எல்ஏவுமான பூண்டி கலைவாணன் மாலை அணிவித்து உற்சாக வரவேற்பளித்தார். நிகழ்ச்சியில், எம்எல்ஏக்கள் டிஆர்பி ராஜா, ஆடலரசன், மதிவாணன், முன்னாள் எம்பியும், மாநில விவசாய அணி செயலாளருமான ஏகேஎஸ்.விஜயன், திருவாரூர் மாவட்ட ஊராட்சி தலைவரும், தலைமை செயற்குழு உறுப்பினருமான தலையாமங்கலம் பாலு, மாவட்ட செயலாளர்கள் தஞ்சை வடக்கு கல்யாணசுந்தரம், தெற்கு துரை.சந்திரசேகர், ஒன்றிய செயலாளர்கள் வலங்கைமான் தெற்கு அன்பரசன், வடக்கு தெட்சிணாமூர்த்தி, மன்னை மேற்கு மேலவாசல் தன்ராஜ், நீடாமங்கலம் ஒன்றியக்குழு தலைவர் சோம செந்தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட ஏராளமான திமுக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Related Stories:

>