ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் நாச்சிக்குளத்தில் இந்திய கம்யூ. 96ம் ஆண்டு அமைப்பு தின விழா

திருத்துறைப்பூண்டி, ஜன.5: முத்துப்பேட்டை அருகே உள்ள நாச்சிக்குளத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 96ம் ஆண்டு அமைப்பு தின கொடியேற்று விழா நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் முருகையன் தலைமை வகித்தார். எம்.பி., செல்வராஜ் கொடியேற்றி வைத்தார். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இதில் முன்னாள் எம்எல்ஏவும், மாவட்ட செயலாளருமான சிவபுண்ணியம், முன்னாள் எம்எல்ஏ உலகநாதன், மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர்கள் சந்திரசேகர ஆசாத், அம்புஜம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Related Stories:

>