கும்பகோணம் நகர்பகுதியில் சேதமடைந்த தார்சாலை சீரமைக்க கோரிக்கை

கும்பகோணம், ஜன.5: கும்பகோணம் நகர் பகுதி முழுவதும் சேதமடைந்த தார்சாலையை நகராட்சி நிர்வாகம் சரி செய்ய வேண்டுமென வாழ்வுரிமை கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. கும்பகோணத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தஞ்சை வடக்கு மாவட்ட நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் வடக்கு மாவட்ட தலைவர் செல்வம் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட துணை செயலாளர் பிரபு, மாவட்ட இளைஞரணி செயலாளர் முருகன், திருவிடைமருதூர் ஒன்றிய செயலாளர் சின்னதம்பி, பொதுசெயலாளர் மணிவண்ணன், தாராசுரம் பேரூர் தலைவர் தனவேல், குடந்தை தெற்கு ஒன்றிய செயலாளர் கார்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், கும்பகோணம் நகரத்தின் அனைத்து பகுதிகளிலும் குண்டும் குழியுமாக உள்ள தார்சாலைகளை நகராட்சி நிர்வாகம் சரி செய்யவேண்டும், தாராசுரம் பேரூராட்சிக்குட்பட்ட 15 வார்டுகளில் கழிப்பிட வசதி ஏற்படுத்தி தரவேண்டும். தை 1ம் தேதி தமிழக வாழ்வுரிமை கட்சியின் 10ம் ஆண்டு துவக்க விழாவை 50 இடங்களில் கொடியேற்றி கொண்டாடுவது உள்பட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நகர இளைஞர் அணி செயலாளர் மணிகண்டன், தலைமை நிலைய செயலாளர் கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>