பேராவூரணியில் அதிமுக தகவல் தொழில்நுட்பபிரிவு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

பேராவூரணி, ஜன.5: அதிமுக தஞ்சை தெற்கு மாவட்டம், பேராவூரணி வடக்கு, தெற்கு ஒன்றியங்கள், பேராவூரணி பேரூராட்சி பகுதி தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் பேராவூரணியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தகவல் தொழில் நுட்பப் பிரிவு மாவட்டச் செயலாளர் முருகேசன் தலைமை வகித்தார். நகர செயலாளர் கருணாகரன் வரவேற்றார். பேராவூரணி வடக்கு ஒன்றிய செயலாளர் துரைமாணிக்கம், தெற்கு ஒன்றிய செயலாளர் இளங்கோ ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் எம்எல்ஏ கோவிந்தராசு, தகவல் தொழில் நுட்பப் பிரிவு மாவட்ட செயலாளர் கதிரவன், பொருளாளர் விக்னேஷ்வரன், இணைச் செயலாளர் வைரவராஜ், பேராவூரணி ஒன்றியக்குழு தலைவர் சசிகலா ரவிசங்கர், மாவட்ட மாணவரணி இணை செயலாளர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

திருவையாறு: திருவையாறு அடுத்த கண்டியூரில் அதிமுக தெற்கு ஒன்றியம் கழகம் சார்பில் தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மண்டல செயலாளர் விணுபாலன் தலைமையில் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் நீலமேகம் முன்னிலை வகித்தார். ததொபிரிவு ஒன்றிய செயலாளர் தினேஷ் வரவேற்று பேசினார். கூட்டத்தில் முன்னாள் எம்எல்ஏ ரெத்தினசாமி, ததொபிரிவு மாவட்ட செயலாளர் சதீஷ் உள்பட பலர் ஆகியோர் கலந்துகொண்டு ஆலோசனை வழங்கி பேசினர். கூட்டத்தில் தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் கலந்துகொண்டனர். தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட துணைச் செயலாளர் இளவரசன் நன்றி கூறினார்.

Related Stories:

>