மினி கிளினிக்குகளுக்கு விரைவில் 835 மருத்துவர்கள் நியமனம் அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

புதுக்கோட்டை, ஜன.5: புதுக்கோட்டை மாவட்டம் நமணசமுத்திரத்தில் புதிதாக முதல்வரின் அம்மா சிறு மருத்துவமனையைத் தொடங்கி வைத்த அவர் செய்தியாளர்களிடம் கூறியது: தமிழ்நாடு முழுவதும் தொடங்கப்படும் அம்மா சிறு மருத்துவமனைகளுக்காக 2000 புதிய மருத்துவர் பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டுள்ளன. இவற்றில் முதல் கட்டமாக 835 மருத்துவர்கள் நியமிக்கப்படவுள்ளன. ஏனையோரும் விரைவில் நியமிக்கப்படுவர். இவர்களுக்கு மாதம் ரூ. 60 ஆயிரம் ஊதியம் வழங்கப்படும். மேலும், 2 ஆயிரம் செவிலியர்கள், 2 ஆயிரம் மருத்துவ உதவியாளர்களும் விரைவில் நியமிக்கப்படவுள்ளனர் என்று அமைச்சர் தெரிவித்தார்.

Related Stories:

>