டிஆர்ஓ துவக்கி வைத்தார் சோழன்குடிக்காடு கிராமத்தில் மரக்கன்று நடும் விழா

அரியலூர்,ஜன.5: அரியலூர் மாவட்டம் செந்துறை அருகிலுள்ள சோழன்குடிக்காடு கிராமத்தில் உள்ள நத்தி ஏரியில் உலக திருக்குறள் கூட்டமைப்பு சார்பில் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்வாழ்வார் 7வது நினைவேந்தல் நாளை முன்னிட்டு மரக்கன்று மற்றும் மரப்போத்துகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் எஸ்பி சீனிவாசன் மரக்கன்று நட்டு நிகழ்ச்சியை துவக்கி வைத்து பேசுகையில், இயற்கையை பாதுகாக்க தொடர்ச்சியாக இதுபோன்று செயல்களில் இளைஞர்களும் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்றார். தொடர்ந்து, நாவல், மந்தாரை, கருங்காலி, அரசு, புங்கன் உள்ளிட்ட 100 மரக்கன்றுகளை நடவு செய்தனர், மேலும் பூவரசு, வாதநாராயணன், ஆலமர போத்துகளை ஏரியை சுற்றி நடவு செய்தனர். இந்நிகழ்ச்சியில், உலக திருக்குறள் கூட்டமைப்பு மாவட்ட தலைவர் ராவணன் மற்றும் கிராம இளைஞர்கள் கலந்து கொண்டு மரக்கன்றுகள், மரப்போத்துகளை நடவு செய்தனர்.

Related Stories:

>