×

விருதுநகரில் பஸ் நிலையத்திற்கு நிலம் கொடுத்தவருக்கு மாற்று நிலம் கொடுக்காமல் அலைக்கழிப்பு 30 ஆண்டாக அலைவதாக மூதாட்டி மனு

விருதுநகர், ஜன. 5: விருதுநகரில் பஸ்நிலையத்திற்கு நிலம் கொடுத்தவருக்கு மாற்றுநிலம் கொடுக்காமல் 30 ஆண்டாக அலையவிட்டதாக மூதாட்டி புகார் மனு அளித்துள்ளார். விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் பேராசிரியர் காலனியைச் சேர்ந்த உமாதேவி அளித்த மனு: விருதுநகர் நகராட்சியில் புதிய பஸ்நிலையம் கட்டுவதற்கு, கடந்த 1989ல் கணவர் பாலசுப்பிரமணியன், நகராட்சி நிர்வாகத்திடம் இடத்திற்கு மாற்று இடம் என்ற அடிப்படையில் பஸ் நிலைய நுழைவு வாயில் பகுதியாக உள்ள 6,040 சதுர அடி நிலத்தை வழங்கினார். இந்த இடத்திற்கு மாற்றாக 700 மீ தொலைவில் உள்ள பழைய குப்பைக் கிடங்கு பயன்படுத்திய இடத்தை தருவதாக கூறினர். கொடுத்த இடத்திற்கு மாற்று இடம் கோரி அலைந்த கணவர் 1-7-2016ல் இறந்துவிட்டார். இது தொடர்பாக கணவர் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. ஒரே மகளும் 15 வருடங்களுக்கு முன் இறந்துவிட்ட நிலையில், மகள் வழி பேரன்கள் இருவர் உள்ளனர். 30 ஆண்டுகளாக மாற்று இடம் கொடுக்காமல் அலைக்கழிக்கப்பட்டு வரும் நிலையில், மாவட்ட நிர்வாகம் உரிய ஏற்பாடு செய்து மாற்று இடம் கிடைக்க உரிய ஏற்பாடு செய்ய வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.

Tags : lady ,land ,bus stand ,Virudhunagar ,
× RELATED பதற்றமான வாக்குச்சாவடிகள்...