பெண் ஊராட்சி தலைவருக்கு கொலை மிரட்டல் 4 பேர் மீது வழக்கு

சிவகாசி,  ஜன. 5: சிவகாசி அருகே, பெண் ஊராட்சி தலைவருக்கு கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாக, 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். சிவகாசி ஊராட்சி ஒன்றியம், புதுக்கோட்டை ஊராட்சியில் தலைவராக இருப்பவர் காளீஸ்வரி (29). இவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த மாஜி  ஊராட்சி தலைவர் சந்திரனுக்கும் முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், கல்வியின் முக்கியத்துவம் குறித்து குறும்படம் ஒன்றில் காளீஸ்வரி நடித்து யூடியூப்பில் பதிவேற்றம் செய்துள்ளார். இந்த குறும்படம்  குறித்து சந்திரனின் உறவினர்கள் சமூக  வலைதளங்களில் அவதூராக பதிவு செய்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக புதுக்கோட்டையைச் சேர்ந்த சத்யராஜ், முத்துக்குமார், நந்தீஸ்வரன்,  சங்கர் ஆகியோரிடம் காளீஸ்வரி கேட்டுள்ளார். இதற்கு 4 பேரும் காளீஸ்வரிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின்பேரில், எம்.புதுப்பட்டி போலீசார் மேற்கண்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து  விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>