×

கரூர் மாவட்டத்தில் 78.20 மி.மீட்டர் மழை பதிவு

கரூர், ஜன. 5: கரூரில் மூன்றாவது நாளாக நேற்றும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதோடு, அவ்வப்போது லேசான அளவில் சாரல் மழையும் பெய்தது. கடந்த மூன்று நாட்களாக மேலடுக்கு சுழற்சி காரணமாக மாவட்டம் முழுதும் கடந்த இரண்டு நாட்களாக சாரல் மழை பெய்து வருகிறது. இந்த சாரல் மழை காரணமாக கரூர் மாவட்டத்தின் சீதோஷ்ணநிலையில் மாற்றம் ஏற்பட்டு, ஜில்லென்ற கிளைமேட்டுடன் காணப்படுகிறது. அவ்வப்போது சாரல் மழை, அதிகாலை நேரத்தில் பனிப்பொழிவு கரூர் மாவட்டத்தில் நிலவி வருகிறது. இதன்படி, நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை மாவட்டம் முழுவதும் 78.20மிமீ மழை பெய்துள்ளது.இதன்படி கரூர் 2.4மிமீ, அரவக்குறிச்சி 12மிமீ, அணைப்பாளையம் 10மிமீ, க.பரமத்தி 5.4மிமீ, குளித்தலை 2மிமீ, தோகைமலை 2மிமீ, கிருஷ்ணராயபுரம் 2.2மிமீ, மாயனூர் 3மிமீ, பஞ்சப்பட்டி 3.2மிமீ, கடவூர் 12மிமீ, பாலவிடுதி 15மிமீ, மயிலம்பட்டி 9மிமீ என மாவட்டம் முழுவதும் 78.20மிமீ மழை பெய்துள்ளது. இதன் மொத்த சராசரி 6.52ஆக உள்ளது.

Tags : Karur ,district ,
× RELATED 2000 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்ட கரும்பு அறுவடை பணிகள் தீவிரம்