போலீசார் தடுத்தனர் தாந்தோணிமலை அருகே பரபரப்பு காரில் பாம்பு புகுந்ததா?

கரூர், ஜன. 5: கரூர் தாந்தோணிமலை அருகே காரின் பேனட்டுக்குள் பாம்பு புகுந்தது என்ற தகவல் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது. கரூர் விவிஜி நகரைச் சேர்ந்தவர் தனபால். இவர், நேற்று மதியம், தனது காரை தாந்தோணிமலைக்கு ஓட்டிச் சென்றார். அரசு கலைக் கல்லூரி முன்பாக காரை நிறுத்தி விட்டு, பேனட்டை திறந்த போது, உள்ளே பாம்பு ஊர்ந்து சென்றதை பார்த்ததாக கூறப்படுகிறது.இது குறித்து இவர், கரூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள், காரை, ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிக்கு கொண்டு வரச்சொல்லி, பின்னர், பேனட் உட்பட பல்வேறு பகுதிகளில் தண்ணீரை பீய்ச்சி அடித்து பாம்பு வெளியேறும் பணிகளை மேற்கொண்டனர்.ஆனால், அரை மணி நேரமாக தீயணைப்புத்துறையினர் இந்த பணியில் ஈடுபட்டாலும், பாம்பு வெளியே வரவில்லை. ஒரு வழியாக பாம்பு வேறு எங்காவது தப்பித்திருக்கும் என்ற ரீதியில் அனைவரும் திரும்பிச் சென்றனர். இதனால், இந்த பகுதியில் ஒரு மணி நேரம் பரபரப்புடன் காணப்பட்டது.

Related Stories:

>