மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

தேனி, ஜன. 5: மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை கண்டித்து டெல்லியில் போராடிவரும் விவசாயிகளுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி புதிய வேளாண்மை சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி, அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் (ஏஐஒய்எப்) சார்பில் தேனி பொம்மையகவுண்டன்பட்டியில் உள்ள பிள்ளையார் கோவில் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்திற்கு தேனி மாவட்ட செயலாளர் பெருமாள் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தின்போது, டெல்லியில் போராடி வரும் விவசாயிகளை அழைத்து பேச மறுக்கின்ற மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 20க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

Related Stories:

>