×

பொதுமக்களை கவனிக்க நேரமில்லை கமிஷன் கிடைக்கும் திட்டங்களில்தான் அதிமுக அமைச்சர்கள் கவனம் திமுக முன்னாள் எம்.எல்.ஏ குற்றச்சாட்டு

போடி, ஜன. 5: போடி அருகே ராசிங்காபுரத்தில் திமுக சார்பில், மக்கள் கிராமசபைக் கூட்டம் நடந்தது. முன்னாள் எம்.எல்.ஏ லட்சுமணன் தலைமை வகித்தார். இதில் கலந்து கொண்ட பொதுமக்கள் அடிப்படை வசதிகள் இல்லை. முதியோர் உதவித்தொகை கிடைக்கவில்லை. 100 நாள் வேலைக்கு ஆபத்து என பல்வேறு புகார்களை தெரிவித்தனர். இதையடுத்து முன்னாள் எம்.எல்.ஏ லட்சுமணன் பேசுகையில், ‘தமிழகத்தில் முதவர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் பொதுமக்களின் குறைகளை தீர்க்க கவனம் செலுத்துவதில்லை. அவர்களின் கவனம் முழுமையும் கமிஷன் கிடைக்கும் திட்டங்களில்தான் இருக்கிறது. பொதுமக்களின் வரிப்பணத்தை சூறையாடுவதில் குறியாக இருக்கின்றனர். மத்திய அரசுக்கு பயந்து அடிமை ஆட்சி நடத்துகின்றனர். தேர்தல் நெருங்குவதால், பொதுமக்களிடம் நெருக்கமாக இருப்பதை போல கட்டி, பணத்தை கொடுத்து வாக்கு வாங்கி வெற்றி பெறலாம் என நினைக்கின்றனர். மக்களின் உணர்வுகளை உண்மையாக புரிந்துள்ள திமுதான், அவர்களுடன் எந்த நேரமும் பயணித்து வருகிறது. வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்று தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராவது உறுதி. இவ்வாறு அவர் பேசினார். இக்கூட்டத்தில், தலைமை கழக பேச்சாளர் கலைச்செல்வன், முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலை வர் செல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : ministers ,AIADMK ,commission ,
× RELATED நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதால்...