சோத்துப்பாறை ராமர் பாதத்தில் துணைமுதல்வர் ஓபிஎஸ் சாமி தரிசனம்

பெரியகுளம், ஜன. 5: பெரியகுளம் அருகே, சோத்துப்பாறை அணைப்பகுதியில் ராமர் பாதம் உள்ளது. இங்கு கடந்த 34 ஆண்டுகளாக சம ஆராதனை மற்றும் வனபோஜனம் நடைபெற்று வந்தது. அதேபோல நேற்று சோத்துப்பாறை பகுதியில் 35ம் ஆண்டு சமாரதனை நடைபெற்றது. முன்னதாக ராமர் பாதத்திற்கு பால், தயிர், சந்தனம், குங்குமம் மற்றும் விபூதி பிரசாதங்களால் அபிசேகம் நடைபெற்றது. அதன் பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.

பக்தர்கள் கொட்டும் மழையில் சாமி தரிசனம் செய்தனர். இதில் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். இந்த பூஜைக்கான ஏற்பாடுகளை குருசாமி ராமநாதன் தலைமையில் ஐயப்ப பக்தர்கள் செய்திருந்தனர். விழாவில், சசிதரன், முரளி, தாசில்தார் ஓய்வுபாலசுந்தரம், அருணாச்சலம் ஆகியோர் வந்திருந்தவர்களை வரவேற்றனர்.

Related Stories:

>