திமுக சார்பில் மக்கள் சபை கூட்டம்

இளையான்குடி, ஜன.5: இளையான்குடி தெற்கு ஒன்றியம் சாலைக்கிராமத்தில், திமுக சார்பில் மக்கள் சபை கூட்டம் நடைபெற்றது. தெற்கு ஒன்றியச் செயலாளர் செல்வராசன் தலைமை தாங்கினார். வடக்கு ஒன்றியச் செயலாளர் சுப.மதியரசன், கிழக்கு ஒன்றியப் பொறுப்பாளர் தமிழ்மாறன், மேற்கு ஒன்றியப் பொறுப்பாளர் வெங்கட்ராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை கழகப் பேச்சாளர் கீழநெட்டூர் அய்யாச்சாமி, அதிமுக ஆட்சியின் அவலங்களை விளக்கி பேசினார். கூட்டத்தில் ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி தமிழ்வாணன், கவுன்சிலர்கள் செல்விசாத்தையா, முருகானந்தம், அடைக்கலம், தனபால் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். தேவகோட்டை : தேவகோட்டை 21வது வார்டு திமுக சார்பில் நேற்று முன்தினம் மக்கள் சபைக்கூட்டம் நடைபெற்றது. நகரச்செயலாளர் பெரி.பாலமுருகன் தலைமை வகித்தார். முன்னாள் கவுன்சிலர் இளங்கோ, அழகையா முன்னிலை வகித்தனர். வார்டு செயலாளர் சக்தி வரவேற்றார். கூட்டம் ஆரம்பித்த நேரத்தில் மழை பெய்யத் தொடங்கியது. கொட்டும் மழையிலும் நனைந்தபடி கட்சித்தொண்டர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் கலந்து கொண்ட மகளிர் தங்களது அடிப்படை வாழ்வாதார பிரச்னைகள் குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றினர்.

Related Stories:

>