×

வயலில் தேங்கிய நீரில் மூழ்கிய நெற்கதிர்கள் வேதனையில் விவசாயிகள்

காளையார்கோவில், ஜன.5: காளையார்கோயில் ஒன்றியத்திற்கு உட்பட்ட 43 பஞ்சாயத்தில் உள்ள 365 கிராமங்களில் ஆயிரக்கணக்கான ஹெக்டர் நிலத்தில் தற்போது நெல் விவசாயம் நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் பெய்த மழையினால் பெரும்பாலான இடங்களில் நெல் விளைந்து அறுவடை செய்யும் நிலையில் உள்ளது. தொடர்ந்து பெய்து வரும் மழையினால் வயல்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் விளைந்த நெற்கதிர்கள் வயலில் சாய்ந்து தண்ணீரில் மூழ்கி விட்டது. இதனால் அறுவடை செய்வதற்கு இயந்திரங்கள் இறங்க முடியாத நிலையில் உள்ளது. விளைந்தும் பயன் இல்லாததால் விவசாயிகள் வேதனை அடைந்து வருகின்றார்கள். இதுகுறித்து முடிகரை மற்றும் சுற்றுவட்ட கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள், கலெக்டர் மற்றும் அமைச்சரிடம் மனு கொடுத்து பாதிப்படைந்த நெல் விவசாயம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இதுபற்றி அமைச்சர் மற்றும் கலெக்டர் சேதமடைந்த பகுதிகளில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்கள்.

Tags : paddy fields ,
× RELATED நெல்லையில் டிரோன்கள் பறக்கத் தடை