×

டிஎஸ்பி, இன்ஸ்பெக்டர்கள் அதிரடி இடமாற்றம்

மதுரை, ஜன. 5: தமிழகத்தில் 9 டிஎஸ்பிகளை இடமாற்றம் செய்து டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார். ராமநாதபுரம் டிஎஸ்பி பேச்சி கன்னியாகுமரி மாவட்டத்திற்கும், ராமநாதபுரம் நில அபகரிப்பு பிரிவு டிஎஸ்பி சரவணன் பெரம்பலூர் மாவட்டத்திற்கும்,  திண்டுக்கல் மாவட்ட டிஎஸ்பி வினோத் விருதுநகர் மாவட்டத்திற்கும், சிவகங்கை டிஎஸ்பி சந்திரன் திண்டுக்கல் மாவட்டத்திற்கு என மாநிலம் முழுவதும் 9 டிஎஸ்பிகளை மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார். இதேபோல் நெல்லை கன்ரோல் ரூம் இன்ஸ்பெக்டர் இளஞ்செழியன் மதுரை தெப்பக்குளம் சட்டம் ஒழுங்கும், தெப்பக்குளம் இன்ஸ்பெக்டர் கணேசன் தல்லாகுளம் குற்றப்பிரிவுக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

Tags : Inspectors Action Transfer ,
× RELATED திமுக கூட்டணிக்கு ஆதரவு