×

அலங்காநல்லூர் பொங்கல் பரிசு விழாவில் எம்எல்ஏ வர 3 மணிநேம் தாமதம் பொதுமக்கள் அவதி

அலங்காநல்லூர், ஜன. 5: அலங்காநல்லூர் பகுதியில் நடந்த பொங்கல் பரிசு விழாவில் எம்எல்ஏ வர 3 மணிநேரம் தாமதமானதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாயினர். அலங்காநல்லூர் பேரூராட்சிக்குட்பட்ட கொண்டையம்பட்டி, முடுவார்பட்டி, சின்ன இந்தைகுளம், அழகாபுரி பகுதிகளில் நேற்று பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கும் விழா நடந்தது. எம்எல்ஏ மாணிக்கம் கலந்து கொண்டு ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு, ரூ.2,500 பணத்தை வழங்கினார். இதில் கூட்டுறவு சங்க தலைவர் பாலாஜி, நகர செயலார் அழகுராஜன், ஜல்லிக்கட்டு விழா குழு நிர்வாகிகள் சுந்தர்ராஜன், சுந்தர்ராகவன், முன்னாள் யூனியன் தலைவர் ராம்குமார், கோட்டாட்சியர் பழனிக்குமார், செயல்அலுவலர் சின்னசாமி பாண்டியன் உள்பட பலர் பங்கேற்றனர்.

முன்னதாக இவ்விழாக காலையில் நடப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் பொதுமக்கள் காலை 9 மணி முதலே வந்து விட்டனர். ஆனால் எம்எல்ஏ 12 மணிக்கு வந்தார். இதனால் நீண்டநேரம் காத்திருந்து பொங்கல் பரிசு வாங்கி சென்றதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாயினர்.  மேலும் பொருட்களை பெறுவதற்கு விழாவில் பொதுமக்கள் சமூக இடைவெளியை மறந்து முண்டியடித்து கொண்டு சென்றனர். இதனால் கூச்சல் குழப்பமும், தள்ளுமுள்ளும் ஏற்பட்டது.
இதேபோல் அலங்காநல்லூர் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலை பண்டகசாலையில் ஆலை நிர்வாக குழு தலைவர் ரவிச்சந்திரன் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு பொருட்கள், ரூ.2,500ஐ வழங்கினார்.

Tags : arrival ,MLA ,prize ceremony ,Alankanallur Pongal ,
× RELATED கணேசமூர்த்தி எம்பி மறைவு: ஈஸ்வரன் எம்எல்ஏ இரங்கல்