×

நத்தம் அருகே வங்கியில் கொள்ளையடிக்க முயற்சி அலாரம் ஒலித்ததால் கொள்ளையர்கள் ஓட்டம்

நத்தம், ஜன.5: நத்தம் அருகே மர்மநபர்கள் வங்கியில் கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நத்தம் அருகே ரெட்டியபட்டியில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி உள்ளது. இங்கு நேற்று முன்தினம் இரவு பூட்டை உடைத்து ஜன்னல் வழியாக மர்ம நபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது வங்கியில் இருந்த அலாரம் ஒலித்ததால் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இதனால் வங்கியில் இருந்த  நகைகளும், ரொக்கப்பணங்களும் தப்பியது. இது குறித்து ரூரல் டி.எஸ்பி வினோத், இன்ஸ்பெக்டர் ராஜமுரளி ஆகியோர்  சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இது சம்பந்தமாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொடர்ந்து ரூபி என்ற மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு அருகில் உள்ள பகுதிகளில் சோதனை செய்யப்பட்டது. மேலும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக  தனிப்படை அமைக்கப்பட்டு கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags : robbers ,bank ,Natham ,
× RELATED ரிசர்வ் வங்கி கட்டுப்பாடுகள் எதிரொலி:...