×

புதிய ஆயக்கட்டு புன்செய் பாசனங்களுக்கு பாலாறு-பொருந்தலாறு அணை திறப்பு 9,600 ஏக்கர் பாசன வசதி பெறும்

பழநி, ஜன.5: பழநி அருகே பாலாறு-பொருந்தலாறு அணையில் இருந்து புதிய ஆயக்கட்டு புன்செய் பாசனங்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.   பழநி பகுதி கிராமங்கள் விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டவை. தொடர் மழையின் காரணமாக பழநி பகுதி விவசாயத்தை ஆதாரமாக உள்ள 65 அடி உயரமுள்ள பாலாறு-பொருந்தலாறு அணை முழுவதும் நிரம்பி வருகிறது. இந்நிலையில்  அணையில் இருந்து புதிய ஆயக்கட்டு புன்செய் பாசனத்திற்காக இடது பிரதான கால்வாய் வழியாக 90 நாட்களுக்கு விநாடிக்கு 70 கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிட தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. இதன்படி நேற்று வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தண்ணீர் திறந்து விட்டார். நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி, கோட்டாட்சியர் அசோகன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் கோபி, இளநிலை பொறியாளர் விஜயமூர்த்தி, முன்னாள் எம்எல்ஏ வேணுகோபாலு, நகரச் செயலாளர் முருகானந்தம், கொழுமங்கொண்டான் ஊராட்சித் தலைவர் மணியரசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நீர்திறப்பினால் பெரியம்மாபட்டி, இரவிமங்கலம், தாதநாயக்கன்பட்டி, நெய்க்காரப்பட்டி, மானூர், தாளையம், கொழுமங்கொண்டான் உள்ளிட்ட 16 கிராமங்களைச் சேர்ந்த 9 ஆயிரத்து 600 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுமென பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags : opening ,Palaru-Porundalaru Dam ,
× RELATED திருச்செந்தூரில் தண்ணீர் பந்தல் திறப்பு