×

திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் முடக்கம் ஐ.பெரியசாமி குற்றச்சாட்டு

சின்னாளபட்டி, ஜன.5:  திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தை அதிமுக அரசு முடக்குகிறது என்று, முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி குற்றம்சாட்டினார். ரெட்டியார்சத்திரம் வடக்கு ஒன்றியம் திமுக சார்பாக கொத்தப்புளி ஊராட்சிக்கு உட்பட்ட தாதங்கோட்டையில் மக்கள் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் மணி தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் சுந்தரி அன்பரசு வரவேற்றார். திண்டுக்கல் எம்.பி. வேலுச்சாமி, மாவட்ட துணை செயலாளர் தண்டபாணி, முன்னாள் ஒன்றிய தலைவர் சத்தியமூர்த்தி, ஒன்றிய துணை தலைவர் ராஜேஸ்வரி, ஊராட்சி மன்ற துணை தலைவர் ரெங்கசாமி, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ரமேஷ், ஒன்றியக்குழு உறுப்பினர் காளீஸ்வரி மலைச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கலந்துகொண்ட திமுக மாநில துணை பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமி பேசுகையில், கலைஞர் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தை அதிமுக அரசு முடக்கி வருகிறது. ரெட்டியார்சத்திரம் ஒன்றியத்தில் திமுக உள்ளாட்சி பிரதிநிதிகள் வந்தபின்பு சாலைவசதி, தண்ணீர் வசதி, தெருவிளக்கு வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டு வருகிறது.

வரும் சட்டமன்ற தேர்தலில் நீங்கள் உதயசூரியன் சின்னத்திற்கு அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் உங்களின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்றும். 20 ஆயிரம் முதியோர்களுக்கு 10 வருடங்களாக உதவித்தொகை நிறுத்தி அவர்களின் வாழ்க்கையை கேள்விக்குறி ஆக்கிய அதிமுக அரசுக்கு 2021 தேர்தலில் முதியோர்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்றார். நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர் ஜெகநாதன், மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் விவேகானந்தன், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் சுப்புலெட்சுமி, ஒன்றிய துணை செயலாளர் பொன்மணி, ஊராட்சி மன்ற தலைவர்கள் சின்னு, பழனிச்சாமி, காமாட்சியப்பன், மாவட்ட பிரதிநிதிகள் இளங்கோ, எல்லை ராமகிருஷ்ணன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஆறுமுகம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


Tags : I. Periyasamy ,Cauvery ,DMK ,
× RELATED ஐ.பெரியசாமி மீதான வழக்கு விசாரணைக்கு தடை