முருகையாபாண்டியன் எம்எல்ஏவிடம் முதல்வர், துணை முதல்வர் நலம் விசாரிப்பு

வி.கே.புரம், ஜன. 5: மூட்டுவலிக்கு சிகிச்சை பெற்று வரும் முருகையா பாண்டியன் எம்எல்ஏவை அவரது இல்லத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சந்தித்து நலம் விசாரித்தனர்.

அம்பை ெதாகுதி சட்டமன்ற உறுப்பினர் முருகையாபாண்டியன், மூட்டுவலி காரணமாக கடந்த ஒரு மாதமாக வீட்டில் இருந்தபடி சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் நேற்று சேரன்மகாதேவியில் நடந்த பிஎச்.பாண்டியன் மணிமண்டபம் திறப்பு விழாவிற்கு வந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தெற்கு பாப்பான்குளத்தில் உள்ள முருகையாபாண்டியன் எம்எல்ஏ வீட்டிற்கு வந்து அவரது உடல்நலம் குறித்து விசாரித்தனர். மேலும் மூட்டு அறுவை சிகிச்சை செய்து கொள்ளுமாறு எம்எல்ஏவிடம் இருவரும் அறிவுறுத்தினர்.

முன்னதாக முதல்வர் மற்றும் துணை முதல்வரை முருகையாபாண்டியன் மனைவி முத்துலெட்சுமி, மகன் வெங்கட்ராமன் மற்றும் குடும்பத்தினர் வரவேற்றனர். அமைச்சர்கள் உதயகுமார், கடம்பூர் ராஜூ, ராஜலட்சுமி மற்றும் தமிழக அரசின் டெல்லி பிரதிநிதி தளவாய்சுந்தரம், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் முனுசாமி, மாவட்ட செயலாளர்கள் தச்சை கணேசராஜா, குட்டியப்பா, எம்எல்ஏக்கள் செல்வமோகன்தாஸ் பாண்டியன், நாராயணன் மற்றும் அம்பை ஒன்றிய செயலாளர் விஜயபாலாஜி, துணை செயலாளர் பிராங்கிளின், நகர செயலாளர்கள் அறிவழகன், கண்ணன், ராமையா, சங்கர நாராயணன், பழனிகுமார் உட்பட பலர் உடனிருந்தனர்.

Related Stories:

>