×

திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 லட்சத்தில் மீன் குஞ்சுகள் வளர்ப்பு அமைச்சர் தொடங்கி வைத்தார்

ஆரணி, ஜன.5: திருவண்ணாமலை மாவட்டத்தில் மீன்வளத்துறை சார்பில் ₹4 லட்சம் மதிப்பில் 2 லட்சம் மீன் குஞ்சுகள் வளர்ப்பு திட்டத்தை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார். திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி ஒன்றியத்திற்குட்பட்ட சேவூர் ஊராட்சியில் உள்ள ரகுநாதபுரம் ஏரியில் மீன்வளதுறை சார்பில் மீன் வளர்ப்பு திட்டத்தில் மீன் குஞ்சு விடும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கினார். வேலூர் மீன்வளத்துறை உதவி இயக்குநர் கங்காதரன், மாவட்ட ஊராட்சிகள் உதவி இயக்குநர் அரவிந்த், பிடிஓ மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மீன்வளத்துறை ஆய்வாளர்(பொறுப்பு) இளங்கோ வரவேற்றார். இதில், அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு, சேவூர் பெரிய ஏரியில் மீன் வளர்ப்பு திட்டத்தில் மீன் குஞ்சுகள் விட்டு தொடங்கி வைத்து பேசியதாவது: மீன்வளத்துறை மூலம் மாவட்டத்தில் உள்ள ஊராட்சி குளங்கள், ஏரிகளில் வளர்ந்த மீன்குஞ்சுகள் வளர்ப்பதன் மூலம் மாவட்டத்தில் மீன் உற்பத்தியை அதிகப்படுத்த முடியும். இதனால் ஊராட்சிக்கு வருவாய் அதிகப்படுத்தவும், கிராம மக்களின் வேலை வாய்ப்பை உருவாக்கலாம்.

மேலும், புரத சத்து மிகுந்த மீன்கள் குறைந்த விலையில் பொதுமக்களுக்கு கிடைப்பதற்காக, 2020-2021ம் ஆண்டு தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டத்தில் மீன்வளத்துறை மூலம் திருவண்ணாமலை மாவட்டத்திற்கு 40 ஹெக்டர் பரப்பிற்கு கலெக்டர் தலைவராக கொண்ட திட்ட செயலாக்க குழு மூலம் ஆரணி, திருவண்ணாமலை, சேத்துப்பட்டு, வந்தவாசி ஆகிய ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த ஊராட்சிகளில் உள்ள 7 ஏரிகளில் ஒரு ஹெக்டருக்கு 5 ஆயிரம் மீன் குஞ்சுகள் வீதம் ₹4 லட்சம் மதிப்பில் இந்திய பெருங்கண்டை ரக கட்லா, ரோகு, மிர்கால் வகை என மொத்தம் 2 லட்சம் மீன் குஞ்சுகள் ஏரி, குளங்களில் வளர்க்கப்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.இதில், ஒன்றிய செயலாளர்கள் பிஆர்ஜி சேகர், ஜி.வி.கஜேந்திரன், சங்கர், திருமால், நகர செயலாளர் அசோக்குமார், ஒன்றிய குழு தலைவர் பச்சையம்மாள் சீனிவசான், மீனவர் கூட்டுறவு சங்க தலைவர் ஆனந்தன், இபி நகர் குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்

Tags : Thiruvannamalai ,district ,Minister ,
× RELATED 1300 மெட்ரிக் டன் உரம் கொள்முதல் * ரயில்...