பெரணமல்லூரில் பொதுமக்கள் மகிழ்ச்சி

பெரணமல்லூர், ஜன.5: பெரணமல்லூர் பேரூராட்சியில் உள்ள பெரிய ஏரி 2வது முறையாக நிரம்பி வழிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். திருவண்ணாமலை மாவட்டத்தில், கடந்த மாதம் நிவர், புரெவில் புயலால் தொடர் மழை பெய்தது. இதனால், பெரணமல்லூர் ஒன்றியத்தில் பெரும்பாலான ஏரிகள் நிரம்பி வழிந்தது. இதில், பெரணமல்லூர் பெரிய ஏரியும் நிரம்பி வழிந்தது. நீர் நிரம்பி வழிந்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாக நீர்வரத்து குறைந்து ஏரி நிரம்பி வழிவது நின்றது. இந்நிலையில், நேற்றுமுன்தினம் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஆங்காங்கே மழை பெய்தது. அதன்படி, பெரணமல்லூர் பகுதியில் சுமார் 4 மணி நேரம் கனமழை பெய்தது. இதனால் பெரிய ஏரிக்கு மீண்டும் நீர்வரத்து அதிகரித்தது. இதனால், நேற்று முதல் மீண்டும் 2வது முறையாக பெரிய ஏரி நிரம்பி வழிய தொடங்கியது. இதனால், பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

Related Stories:

More