×

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் மனுக்களை பெட்டியில் செலுத்திய மக்கள் குறைதீர்வு கூட்டம் ரத்து

திருவண்ணாமலை, ஜன.5: திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் குறைதீர்வு கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதால், அலுவலகத்தில் வைத்திருந்த பெட்டிகளில் கோரிக்கை மனுக்களை போதுமக்கள் செலுத்தினர். திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில், வாரந்தோறும் திங்கட்கிழமையன்று நடைபெறும் மக்கள் குறைதீர்வு கூட்டம், கொரோனா பரவல் கட்டுப்பாடு காரணமாக கடந்த மார்ச் முதல் நடைபெறவில்லை. பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு காண தொலைபேசி வழியாக தெரிவிக்கும் குறைகளை கேட்கும் நிகழ்வு நடந்தப்படுகிறது. ஆனாலும், நேரில் வந்து பொதுமக்கள் மனுக்களை அளிப்பதையே விரும்புகின்றனர். எனவே, பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை கலெக்டர் அலுவலகம் மற்றும் தாலுகா அலுவலகங்களில் வைக்கப்பட்டுள்ள பெட்டியில் செலுத்தலாம் என கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார். மேலும், கோரிக்கைகளை gdp.tn.gov.in என்ற இணையதளத்திலும், tiruvannamalaipetitionbox@gmail.com மின்னஞ்சல் மூலமும் அனுப்பி வைக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்த பொதுமக்கள், தங்களுடைய கோரிக்கை மனுக்களை, அலுவலக நுழைவு வாயிலில் வைத்திருந்த கோரிக்கை பெட்டியில் செலுத்திவிட்டு சென்றனர். மனுக்களை பெட்டியில் செலுத்துவதால், சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அவை முறையாக செல்கிறதா என்ற அச்சம் பொதுமக்களிடம் உள்ளது. மேலும், மனுக்களை பெற்றுக்கொண்டதற்கான ஒப்புகை ரசீதும் கிடைப்பதில்லை. எனவே, கொரோனா வழிப்புணர்வு கட்டுப்பாடுகளுடன், கோரிக்கை மனுக்களை அதிகாரிகள் நேரில் பெற வேண்டும், ஒவ்வொரு மனுவுக்கும் ஒப்புகை ரசீது வழங்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Tags : grievance meeting ,office ,Thiruvannamalai Collector ,
× RELATED மக்கள் குறைதீர் கூட்டத்தில் பள்ளி...