விபத்துகளை தவிர்க்க போலீசார் பேரிகார்டுகள் அமைப்பு நிம்மியம்பட்டு சாலையில்

ஆலங்காயம், ஜன.4: நிம்மியம்பட்டு சாலையில் விபத்துக்களை தவிர்க்க போலீசார் பேரிகார்டுகள் அமைத்துள்ளனர். ஆலங்காயம் பகுதியிலிருந்து வாணியம்பாடி செல்லும் பிரதான சாலையில் உள்ளது நிம்மியம்பட்டு கிராமம். இரு பகுதியில் வார சந்தை மைதானம் மற்றும் பிரசித்தி பெற்ற கோயில்கள், தேசிய வங்கிகள் ஆகியவை இயங்கி வருகின்றன. இந்தநிலையில் நிம்மியம்பட்டு சாலையில் சாலையோர மின் விளக்குகள் இல்லாததால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வாகன ஓட்டிகள் காயம் அடைவது தொடர்கதையாகி வந்தது. இதன் காரணமாக விபத்துக்களை குறைக்கும் வகையில், ஆலங்காயம் இன்ஸ்பெக்டர் நாகராஜ் அறிவுரையின் பேரில் போலீசார் வேகத் தடைகள் மற்றும் ஒளிரும் வகையில் பேரிகார்டுகள் அமைத்துள்ளனர்.

Related Stories:

>