×

அண்ணாமலையார் கோயிலில் திரளான பக்தர்கள் தரிசனம் விடுமுறை தினமான நேற்று

திருவண்ணாமலை, ஜன.4: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், விடுமுறை நாளான நேற்று ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், ஊரடங்கு தளர்வின் காரணமாக கடந்த 4 மாதங்களாக தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். கார்த்திகை தீபத்திருவிழாவுக்கு பிறகு கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதன்படி, விடுமுறை தினமான நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் அண்ணாமலையார் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தனர். குறிப்பாக, வெளி மாவட்டங்கள் மற்றும் ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் இருந்து அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் வருகையிருந்தது.

அண்ணாமலையார் கோயில் ராஜகோபுரத்துக்கு வெளியே வரை தரிசன வரிசை நீண்டிருந்தது. வழக்கம் போல, பொது தரிசனம் மற்றும் ₹20 கட்டண தரிசன வரிசையில், கொரோனா விழிப்புணர்வு கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். மேலும், அமர்வு தரிசனம், சிறப்பு தரிசனம் ரத்து செய்யப்பட்டிருந்தது. பொது தரிசனம், கட்டண தரிசன வரிசையில் சென்ற பக்தர்கள், சுவாமி சன்னதி, அம்மன் சன்னதியில் தரிசனம் முடிந்ததும், தெற்கு கோபுரம் வழியாக வெளியே செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோயிலின் மற்ற பிரகாரங்களில் உள்ள சன்னதிகளை தரிசனம் செய்ய கோயில் நிர்வாகம் இன்னும் அனுமதி அளிக்கவில்லை.

Tags : Crowds ,devotees ,Annamalaiyar Temple ,
× RELATED மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க...