வேலூர் பாகாயத்தில் கல்குவாரி குட்டையில் மூழ்கி வாலிபர் பலி

வேலூர், ஜன.4: வேலூர் பாகாயத்தில் கல்குவாரி குட்டையில் மூழ்கி வாலிபர் பலியானார். வேலூர் சலவன்பேட்டையைச் சேர்ந்தவர் இக்பால்(18), மெக்கானிக். இவர் நேற்று மதியம் 2 மணியளவில் பாகாயம் அருகே சாஸ்திரி நகரில் உள்ள கல்குவாரி குட்டையில் 3 நண்பர்களுடன் குளிக்க சென்றுள்ளார். அப்போது கல்குவாரி குட்டையில் குதித்த இக்பால் நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர்கள் கூச்சலிட்டனர்.

அங்கு வந்த அக்கம் பக்கத்தினர், வாலிபரை தேடும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும் வேலூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் இக்பாலை சடலமாக மீட்டனர்.

இதுகுறித்து பாகாயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. வேலூர் பாகாயம் அடுத்த சாஸ்திரி நகரில் உள்ள கல்குவாரி குட்டையில் மூழ்கி பலியான இக்பாலின் சடலத்தை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.

Related Stories:

>