×

தமிழக சிறைகளில் 2020ம் ஆண்டில் 70 கைதிகள் பலி அதிகாரிகள் தகவல்

வேலூர், ஜன.4: தமிழக சிறைகளில் கடந்த 2020ம் ஆண்டில் 70 கைதிகள் உயிரிழந்துள்ளதாக சிறைத்துறை அதிகாரிகள் ெதரிவித்தனர். தமிழகத்தில் சென்ைன புழல், திருச்சி, வேலூர், பாளையங்கோட்டை, மதுரை என மொத்தம் 9 மத்திய சிறைச்சாலைகள் உள்ளன. இதுதவிர பெண்களுக்காக 5 தனிச்சிறைகள், 9 மாவட்ட சிறை, 88 ஆண்களுக்கான கிளைச்சிறை, 8 பெண்களுக்கான கிளைச்சிறை, 2 ஆண்களுக்கான தனி கிளைச்சிறை, 12 சிறுவர் சீர்திருத்தப்பள்ளி, 3 திறந்த வெளிச்சிறைகள் என மொத்தம் 138 சிறைகள் உள்ளன. இவற்றில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.

சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள் ஆஸ்துமா, மூச்சு திணறல், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், காசநோய் உள்ளிட்ட உடல்நலக்கோளாறுகளால் மருத்துவமனைகளில் அவ்வப்போது அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இதில் தமிழக சிறைகளில் உடல் நலக்குறைவால் கடந்த ஆண்டு மட்டும் 70 கைதிகள் இறந்துள்ளனர். இதேபோல் வேலூர் மத்திய சிறையில் கடந்தாண்டு 8 கைதிகள் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளனர். சிறைகளில் உயிரிழந்த கைதிகள் ஆஸ்துமா, மூச்சுத்திணறல், வலிப்பு நோய் காரணமாக உயிரிழந்துள்ளதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில் தற்போது குளிர்காலம் என்பதால் ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்ட கைதிகளுக்கு மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே ஆஸ்துமாவால் அவதிப்படும் கைதிகளுக்கு போதிய மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கைதிகள் தற்கொலை முயற்சி
வேலூர் மத்திய சிறையில் குடியாத்தம் பகுதியை சேர்ந்த சாந்தகுமார்(22) என்பவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு அடைக்கப்பட்டிருந்தார். இவர் கடந்த ஜூன் மாதம் சிறைக்குள் இருந்த இரும்பு கம்பியை வயிற்றில் குத்திக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார். அதேபோல், மானாமதுரையை சேர்ந்த ஆயுள் தண்டனை கைதி பர்மா பாண்டி(32) என்பவரும் கடந்த ஜூலை மாதம் சிறை வார்டனுடன் ஏற்பட்ட தகராறையடுத்து பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர். இதேபோல், பல்வேறு சிறைகளில் கைதிகளுக்கு ஏற்படும் மன அழுத்தம், சிறை காவலர்களின் டார்ச்சர் ஆகியவற்றால் தற்கொலைக்கு முயன்ற சம்பவங்கள் நடக்கிறது. இதனால், கைதிகளுக்கு போதிய கவுன்சிலிங் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

Tags : prisoners ,Tamil Nadu ,jails ,
× RELATED 10ம் வகுப்பு பொதுத்தேர்வு புழல் சிறையில் 39 கைதிகள் எழுதினர்