262வது பிறந்தநாள் விழா கயத்தாறில் கட்டபொம்மன் சிலைக்கு கலெக்டர், கட்சியினர் மரியாதை

கயத்தாறு, ஜன. 4: வீரபாண்டிய கட்டபொம்மனின் 262வது பிறந்தநாளையொட்டி கயத்தாறு மணிமண்டபத்திலுள்ள அவரது சிலைக்கு கலெக்டர், கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட்ட வீரபாண்டிய கட்டபொம்மனின் 262வது பிறந்தநாளை முன்னிட்டு கயத்தாறு மணிமண்டபத்தில் உள்ள அவரது வெண்கல சிலைக்கு தூத்துக்குடி கலெக்டர் செந்தில்ராஜ் மாலை அணிவித்து மரியாதை செய்தார். இதில் கோவில்பட்டி ஆர்டிஓ விஜயா, கயத்தாறு தாசில்தார் பாஸ்கரன், ஆர்ஐ காசிராஜன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தேமுதிக துணைச்செயலாளரும், உயர்மட்ட குழு உறுப்பினருமான எல்.கே.சுதீஷ், தூத்துக்குடி மாவட்ட செயலாளர்கள் வடக்கு  அழகர்சாமி, தெற்கு சந்திரன், தேர்தல் பிரிவு செயலாளர் ஆறுமுகநயினார், மகளிரணி துணை செயலாளர் சுமுப்பிரியா மாலை அணிவித்து மரியாதை செய்தனர். அமமுக மாவட்ட செயலாளர்கள் வடக்கு சிவபெருமாள், தெற்கு பிரைண்டன், கயத்தாறு மேற்கு ஒன்றிய செயலாளர் கணபதிபாண்டியன், நகர செயலாளர் சுப்பிரமணி, வர்த்தக அணி பாக்கியசெல்வன், மேற்கு ஒன்றிய ெஜ.பேரவை உத்தண்டராஜ், மதிமுக சார்பில் மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ரமேஷ், இளைஞரணி செயலாளர் விநாயகா ரமேஷ், சிவசேனா மாநில துணைத்தலைவர் போஸ், இளைஞரணி திருமுருக தினேஷ், தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக்கழக மாநில அவைத்தலைவர் பி.எஸ்.மணி தலைமையில் மாநில தலைவர் சங்கரவேலு, பொதுச்செயலாளர் தங்கராஜ், மாநில காப்பாளர் கோபால்சாமி, கொள்கை பரப்பு செயலாளர் ராமலிங்கம், தூத்துக்குடி மாவட்ட தலைவர் கண்ணன், அவைத்தலைவர் மாப்பிள்ளை சாமி, மனோகரன், இளைஞரணி சிவக்குமார், சேர்மத்துரை உள்பட பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு அறக்கட்டளை நிறுவன தலைவர் கே.எஸ்.குட்டி, பொருளாளர் செண்பகராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.

Related Stories:

>