பைக்குகள் தீவைத்து எரிப்பு

சிவகிரி, ஜன. 4: சிவகிரி அருகே ராயகிரியில் நள்ளிரவில் இரு பைக்குகளை தீ வைத்து எரித்தவரை போலீசார் தேடி வருகின்றனர். ராயகிரி கற்பகவிநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்த செந்தூர்பாண்டி மகன் முத்துராஜ் (30). தனியார் நிறுவன ஊழியர்.  இவரும், அதே ஊர் வடக்கு காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த  குருசாமி மதன் மகேந்திரன் (45) என்பவரும் தங்களது பைக்குகளை தங்கள் வீட்டின் முன் நிறுத்தியிருந்தனர். நள்ளிரவு அங்குவந்த மர்மநபர், இரு பைக்குகளையும் தீ வைத்து எரித்து சென்றனர். புகாரின் பேரில் வழக்குப் பதிந்த சிவகிரி எஸ்ஐ ராஜேந்திரன், மர்ம நபரைத் தேடி வருகிறார்.

Related Stories:

>