ஆட்டோ டிரைவர்களுக்கு புத்தாண்டு, பொங்கல் பரிசு இசக்கிசுப்பையா வழங்கினார்

அம்பை, ஜன. 4: அம்பை தொகுதியில் ஆட்டோ டிரைவர்களுக்கு புத்தாண்டு, பொங்கல் பரிசுகளை முன்னாள் அமைச்சர் இசக்கிசுப்பையா வழங்கினார். அம்பை தொகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர்களுக்கு ஆண்டுதோறும் முன்னாள் அமைச்சர் இசக்கி சுப்பையா, தனது சொந்த செலவில் புத்தாண்டு மற்றும் பொங்கல் பரிசு வழங்கி வருகிறார். அதன்படி இந்தாண்டும் அம்பை தொகுதிக்குட்பட்ட கோபாலசமுத்திரம், மேலச்செவல், பத்தமடை, சேரன்மகாதேவி, வீரவநல்லூர், கல்லிடைக்குறிச்சி, அம்பை, வி.கே.புரம் ஆகிய பகுதிகளை சேர்ந்த ஆட்டோ டிரைவர்களுக்கு புத்தாண்டு மற்றும் பொங்கல் பரிசுகளை முன்னாள் அமைச்சர் இசக்கி சுப்பையா வழங்கினார்.

நிகழ்ச்சியில் அதிமுக தலைமை பொதுக்குழு உறுப்பினர் முத்துச்சாமி, கல்லிடை கூட்டுறவு நகர வங்கி தலைவர் சந்தானம், வழக்கறிஞர் கார்த்திக், லெட்சுமிபதி தொடக்க கூட்டுறவு வங்கி தலைவர் மாரிராஜன், சேரை ஒன்றிய பாசறை செயலாளர் சொரிமுத்து ராஜா, இசக்கி, சிவன்பாபு, ஆனையப்பன், சந்துரு, பிளம்பர் முஸ்தபா, நாடு(எ) நல்லபெருமாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>