×

திருவாலங்காடு அருகே நாதக பிரசார கூட்டத்தில் மின்கம்பத்தில் கொக்கி போட்டு மின்சாரம் திருட்டு

 

திருத்தணி: திருவாலங்காடு அருகே நாதக பிரசார கூட்டத்தில் மின்கம்பத்தில் கொக்கி போட்டு மின்சாரம் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்து. இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நாம் தமிழர் கட்சி சார்பில், திருவள்ளூர் சட்டமன்ற தொகுதியில் செந்தில்குமார் வேட்பாளராக போட்டியிடுகிறார்.

இவர், தனது தேர்தல் பிரசாரத்தை திருவாலங்காடு அருகே வாக்குச்சாவடி எண்-1 அருங்குளம் கிராமத்தில் நேற்று மாலை தொடங்கினார். தேர்தல் பிரசார பரப்புரையில் அக்கட்சியின் இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் கார்த்திக் பங்கேற்று பேசுகையில், ”சினிமா மோகத்தில் இளைஞர்களை கவர்ந்து முதலமைச்சர் கனவில் விஜய் உங்கள் முன் வருகிறார்.

சிந்தித்து ஒருமுறை பிரபாகரன் பிள்ளைகளுக்கு ஒரு வாய்ப்பு கொடுத்து பாருங்கள். மனிதர்கள் மட்டுமல்ல, இயற்கையையும் எப்படி நேசிப்போம் என்பதை காட்டுவோம்” என பேசினார். இந்நிலையில், ஊழல், துஸ்பிரயோகம் குறித்து பேசும் நா‌தகவினர் பிரசார கூட்டத்திற்கு அருகில் இருந்த மின்கம்பத்தில் இருந்து கொக்கி போட்டு மின்சாரம் திருடியது, டிபன் பாக்சுக்காக பெண்கள் முட்டிமோதிக்கொண்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மின்சார திருட்டு தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags : Nataka Prasara ,Thiruvalangadu ,THIRUTHANI ,NATHAKA PRASARA ,THIRUWALANGAD ,Tamil Party ,Senthilkumar ,Thiruvallur Assembly Constituency ,
× RELATED சென்னை பெருநகர காவல் ஆணையரகத்தில்...