×

வாக்கிங் சென்றவர் பைக் மோதி காயம்

நெல்லை,ஜன.4: பாளை அருகே உள்ள குப்பைகுறிச்சி பிள்ளையார் கோயில் தெருவை  சேர்ந்தவர் வெள்ளையன் (65). இவர் நேற்று முன்தினம் தனது மனைவியுடன் நடைபயிற்சி சென்றார். அப்போது பின்னால் வந்த பைக் இவர் மீது மோதியது. இதில் வெள்ளையனுக்கு காலில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் வண்ணார்பேட்டையில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பைக்கை ஓட்டி வந்த சீவலப்பேரியை சேர்ந்த ஹரிகிருஷ்ணனிடம் சீவலப்பேரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags : Walker ,
× RELATED திகலர் பர்பிள்: விமர்சனம்