×

முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி

கெங்கவல்லி, ஜன.4: கெங்கவல்லி அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில், 1998-2000ம் ஆண்டு பயின்று 20ஆண்டுகள் நிறைவு விழா, முன்னாள் மாணவர்கள, ஆசிரியர் சந்திப்பு நிகழ்ச்சி, கெங்கவல்லி அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் நடந்தது. இந்நிகழ்ச்சியில் முன்னாள் சேலம் முதன்மை கல்வி அலுவலர் ஈஸ்வரன், முன்னாள் கல்லூரி முதல்வர்கள் கிருஷ்ணன், முத்துசாமி, மூர்த்தி, தற்போதை முதல்வர் சித்திரபுத்திரன், ஆசிரியர் பெருமக்கள் மனோகரன், சிவாஜி, பஷீர், ராதாருக்மணி ஆகியோர் சிறப்புரையாற்றினர். தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநில துணை தலைவர் மாயகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். முன்னதாக இளவரசன் வரவேற்றார். கண்ணன் மற்றும் சுந்தரேசன் ஆகியோர் அனைத்து ஏற்பாடுகளையும் செய்தனர். ஜேசுராஜ் நன்றி கூறினார்.

Tags :
× RELATED சென்னை-மங்களூரு எக்ஸ்பிரசில் கூடுதல் ஏசி பெட்டி இணைப்பு