ஏற்காட்டில் பொங்கல் வைத்து கிறிஸ்தவர்கள் வழிபாடு

ஏற்காடு, ஜன.4: ஏற்காடு, லாங்கில்பேட்டை கிராம வேளாங்கண்ணி ஆலயத்தில், 110 கிறிஸ்தவ குடும்பத்தினர் பொங்கல் வைத்து நேற்று வழிபாடு நடத்தினர். இயேசு பிறந்து 8வது நாள் மெல்கியோர், கஸ்பார், பல்தாசார் ஆகிய மூன்று அரசர்கள் வெவ்வேறு தேசத்தில் இருந்த குழந்தை இயேசுவை பார்த்து வாழ்த்துவர். இந்த தினத்தையொட்டி, கிறிஸ்தவர்கள் வேளாங்கண்ணி ஆலய வளாகத்தில் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர். பாத்திரம் மற்றும் தண்ணீர் மட்டும் பக்தர்கள் கொண்டு வர, பொங்கல் செய்ய தேவையான பொருட்களை ஆலய நிர்வாகத்தினர் வழங்கியதையடுத்து, 110 கிறிஸ்தவ குடும்பத்தினர் பொஙகல் வைத்து வழிபாடு நடத்தினர்.

Related Stories:

>