×

வீரபாண்டி ராஜாவை சந்தித்து திமுக நிர்வாகிகள் வாழ்த்து

வாழப்பாடி, ஜன.4: சேலம் வி.எஸ்.ஏ பொறியியல் கல்லூரி வளாகத்தில், புத்தாண்டு  பிறப்பையொட்டி, திமுக நிர்வாகிகள் வாழப்பாடி நகர செயலாளர் செல்வம், முத்தம்பட்டி வன்னியர் மாரியம்மன் கோயில் திமுக கிளை செயலாளர் கலைச்செல்வன், பாளையம் கல்பனா, ஆகியோர் நேரில் சென்று, திமுக மாநில தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர் வீரபாண்டி ராஜாவை சந்தித்து வாழ்த்து பெற்றனர். இதில், சேலம் மேற்கு மாவட்ட அவைத்தலைவர் கோபால், பனமரத்துப்பட்டி ஒன்றிய குழு துணைத்தலைவர் பாரப்பட்டி குமார், பெரிய கிருஷ்ணாபுரம் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் முத்துலிங்கம், ராஜபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் ரமேஷ், கெங்கவல்லி ஒன்றிய தகவல் தொழில் நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் வரதராஜ், கேபில் அறிவு, ஓமலூர் கார்த்தி, பாரப்பட்டி மனோஜ் குமார், இளைஞர் அணி பாபு ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags : executives ,Veerapandi Raja ,DMK ,
× RELATED பாமக நிர்வாகிகள் 50 பேர் திமுகவில் இணைந்தனர்