மேச்சேரி, ஜன.4: மேச்சேரி சுற்றுவட்டார பகுதியில், தனிப்படை போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, மேச்சேரி ஆட்டு சந்தையில் கஞ்சா விற்பனை செய்த வாலிபரை, மேச்சேரி போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர். விசாரணையில், அவர் குக்கல்பட்டியை சேர்ந்த குப்புராஜ் மகன் கார்த்திக்(23), டிப்ளமோ படித்து விட்டு, கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்து, அவரிடம் இருந்த 100கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.