திமுக விவசாய அணி அமைப்பாளர் நியமனம்

ஆத்தூர், ஜன.4: சேலம் கிழக்கு மாவட்ட திமுக விவசாய அணிக்கான மாவட்ட அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டு, அதற்கான அறிவிப்பை திமுக விவசாய அணி செயலாளர்கள் சின்னசாமி, விஜயன் ஆகியோர் வெளியிட்டுள்ளனர். அந்த அறிவிப்பில் கூறியிருப்பதாவது: சேலம் கிழக்கு மாவட்ட விவசாய அணி அமைப்பாளராக ஆத்தூர் நகரத்தை சேர்ந்த சேகர் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் மாவட்ட துணை அமைப்பாளர்களாக, தலைவாசல் ஒன்றியம் நாலுரோடு நடேசன், குள்ளப்பநாயக்கனூர் உதயகுமார், கடம்பூர் சித்தார்த்தன், வாழப்பாடி வடக்குகாடு குமார், தலைவாசல் தேவேந்திரன், மல்லியகரை ராஜா, மஞ்சனி அன்பரசு, வாழப்பாடி தனசேகர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர் என அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. புதியதாக நியமிக்கப்பட்ட விவசாய அணி நிர்வாகிகள் நேற்று சேலம் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் எஸ்.ஆர்.சிவலிங்கத்தை நேரில் சந்தித்து நன்றி தெரித்தனர்.

Related Stories:

>